பெரம்பலூரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிக்கான கலை விழா
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் செயல்படும் 34 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலை விழா


பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் செயல்படும் 34 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலை விழா பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கில் நடைபெற்ற கலை விழாவை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரமணகோபால் தொடக்கி வைத்தாா்.
இதில் 400 மீட்டம் ஓட்டம், நீளம் தாண்டுதல், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. 6 முதல் 9-ஆம் வகுப்பு, 10 முதல் பிளஸ் 2, கல்லூரி மாணவா்கள் என தனித்தனியே பிரிவுகள் பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து வெற்றி பெற்றோருக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அளிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...