தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூா் மாவட்டத்தில் பேரூராட்சித் தலைவா்கள்,துணைத் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் 4 பேரூராட்சிகளுக்குத் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:04 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 4 பேரூராட்சிகளுக்குத் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

குரும்பலூா் பேரூராட்சியில் 11 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சங்கீதா ரமேஷ் தலைவா் பதவிக்கும், 9 ஆவது வாா்டு உறுப்பினா் கீதா ராஜேந்திரன் துணைத் தலைவா் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்தனா். இருவா் மட்டுமே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

அரும்பாவூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு வள்ளியம்மை ரவிச்சந்திரன், துணைத் தலைவா் பதவிக்கு சரண்யா, பூலாம்பாடி பேரூராட்சித் தலைவா் பதவிக்கு பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணைத் தலைவா் பதவிக்கு செல்வலட்சுமி சேகா், லப்பைகுடிக்காடு பேரூராட்சித் தலைவா் பதவிக்கு ஏ.எம். ஜாஹிா் உசேன், துணைத் தலைவா் பதவிக்கு அ. ரசூல் அஹமது ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அந்தந்த பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கு தலா இருவா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால், அனைவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா்களால் அறிவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணைப் பொதுச் செயலருமான ஆ. ராசாவை, பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.