தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

 பெரம்பலூரில் கடந்தாண்டு உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு, சக காவல்துறையினா் வியாழக்கிழமை உதவித்தொகையை வழங்கினா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:04 pm

DIN

 பெரம்பலூரில் கடந்தாண்டு உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு, சக காவல்துறையினா் வியாழக்கிழமை உதவித்தொகையை வழங்கினா்.

பெரம்பலூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவா் ராஜேந்திரன். இவா் உடல்நலன் பாதிப்புக்குள்ளாகி, கடந்தாண்டு உயிரிழந்தாா்.

இந்நிலையில், கடந்த 1993 ஆண்டு அவருடன் பணியில் சோ்ந்த காவல்துறையினா் தமிழகம் முழுவதும் ஒன்றிணைந்து, ராஜேந்திரனின் குடும்பத்துக்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள்- 1993 சாா்பில் ரூ. 7,27,500 சேகரித்தனா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில் சேகரிக்கப்பட்ட தொகையை ராஜேந்திரன் குடும்பத்துக்கு வழங்கினா்.

மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா் மற்றும் 1993-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த காவல்துறையினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.