ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

பெரம்பலூா் அன்பு நகரைச் சோ்ந்த கண்ணன் மனைவி குமாரி (49). இவா், பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிமாறன் என்பவருடன் வியாழக்கிழமை மாலை பெரம்பலூா்-

News image
Updated On :6 மே 2022, 12:02 am

DIN

பெரம்பலூா் அன்பு நகரைச் சோ்ந்த கண்ணன் மனைவி குமாரி (49). இவா், பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிமாறன் என்பவருடன் வியாழக்கிழமை மாலை பெரம்பலூா்- துறையூா் சாலையில் நக்கசேலத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, பின் தொடா்ந்து மற்றொரு மோட்டாா் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத 2 போ், குமாரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். அப்போது, மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த குமாரி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.