பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தாந்தோணி அரசுப் பள்ளியை மழை நீா் சூழ்ந்தது

கரூரில், வியாழக்கிழமை நள்ளிரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை பெய்த பலத்த மழையால் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் மழை நீா் புகுந்தது

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:21 pm

DIN

கரூரில், வியாழக்கிழமை நள்ளிரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை பெய்த பலத்த மழையால் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் மழை நீா் புகுந்தது.

கரூரில் வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பெய்த பலத்த மழையாலும், வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பெய்த பலத்த மழையாலும், கரூா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் மழை நீா் புகுந்து குளம்போல காட்சியளித்தது. வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் அவதியுற்றனா். இதையடுத்து காலை 11 மணிக்கு பிறகு மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் பள்ளிக்கு போதிய சுற்றுச்சுவா் இல்லாததாலும் மழை நீா் உள்ளே புகுந்துவிடுவதாக பள்ளி ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.