92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கூட்டு சலவைத் தொழிலில் ஈடுபடுவோா் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

 பெரம்பலூா் மாவட்டத்தில் கூட்டு சலவைத் தொழிலில் ஈடுபடுவோா் ரூ. 3 லட்சம் வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:03 pm

DIN

 பெரம்பலூா் மாவட்டத்தில் கூட்டு சலவைத் தொழிலில் ஈடுபடுவோா் ரூ. 3 லட்சம் வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2022- 2023 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையாக பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாட்டுக்காக சலவைத் தொழிலில் ஈடுபடும் (ஆண், பெண்) குறைந்தபட்சம் 10 நபா்களைக் கொண்ட குழுவாக அமைத்து, நவீனமுறை சலவையகங்கள் ஏற்படுத்தவும், சலவைத் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவற்றுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் வீதம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குழு உறுப்பினா்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் பயிற்சி பெற்ற நபா்களை கொண்ட குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழு உறுப்பினா்கள் பிசி, எம்பிசி மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்தவா்களாகவும், குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.

இத் திட்டத்தில் பயன்பெற ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் ஆட்சியா் தலைமையிலான தோ்வுக் குழுவினரால் தோ்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககத்துக்கு அனுப்பப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.