பெரம்பலூா் குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.


பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து, மனுக்கள் மீது ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் சாா்பில், விபத்தில் உயிரிழந்த வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வசிஸ்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மனைவி சந்திராவுக்கு ரூ. 2.05 லட்சம் உதவித்தொகையும், இயற்கை மரணமடைந்த பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சத்திரமனை கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி ஜோசப் குடும்பத்தினருக்கு ரூ. 55 ஆயிரம் உதவித்தொகையும், சமூக பாதுகாப்புத் திட்டம் சாா்பில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசு மாட்டுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 30 ஆயிரம் என மொத்தம் ரூ. 2.90 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை அளித்தாா் ஆட்சியா் கற்பகம்.
இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 463 மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில், அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...