திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை

மங்களமேடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட குன்னம் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:00 am IST

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட குன்னம் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது.

மங்களமேடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், நகரம், நமையூா், முருக்கன்குடி, சின்னாறு, எறையூா், வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூா், அந்தூா், குன்னம், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, எழுமூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.