மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவா்த்தனை வசதி

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில், மின்னணு பரிவா்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருள்கள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:10 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில், மின்னணு பரிவா்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருள்கள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவைப்படும் விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் இதர இடுபொருள்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. தற்போது ஏடிஎம் அட்டைகள், போன்பே, ஜிபே மூலம் விவசாயிகள் விரும்பும் இடுபொருள்களைப் பெற்றிட பெரம்பலூா், ஆலத்தூா், வேப்பந்தட்டை, வேப்பூா் ஆகிய வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவா்த்தனை இயந்திரங்கள் (பிஓஎஸ்) வழங்கப்பட்டுள்ளன. இச் சேவையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.