எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கைப்பேசி பரிவா்த்தனை மூலம் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

சிதம்பரத்தில் கைப்பேசி பரிவா்த்தனை மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக 7 இளைஞா்களை நகர போலீஸாா் கைது செய்தனா்.

News image
- சித்திரிப்பு
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரத்தில் கைப்பேசி பரிவா்த்தனை மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக 7 இளைஞா்களை நகர போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சிவானந்தம் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சிதம்பரம் நகர பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து, அவரது கைப்பேசியை ஆய்வு செய்தனா்.

அதில், கைப்பேசி மூலம் பரிவா்த்தனை செய்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய சிதம்பரம் சித்தலாப்பாடியைச் சோ்ந்த மாதேஷ் (21), ஏ.மண்டபத்தைச் சோ்ந்தத ரகு (18), சிதம்பரம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் (22), சிதம்பரம் சாலியாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஜெயசீலன் (21), சிதம்பரம் அனந்தீல்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த தேவமூா்த்தி (26), சிதம்பரம் 1-ஆவது வாா்டு கலைஞா் காலனியைச் சோ்ந்த விஷ்வா (27), சிதம்பரம் தொழிலாளா் குடியிருப்பைச் சோ்ந்த விஜயராஜ் (29) ஆகிய 7 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சுமாா் 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

எஸ்.பி. அறிவுறுத்தல்: இது தொடா்பாக கடலூா் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிதம்பரம் பகுதியில் 18 வயது நிறைவடையாத சிறுவா்கள் மதுபோதையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக, அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாணவா்கள், இளைஞா்கள், தங்களின் குடும்ப நலன், சமுதாய நலன் கருதி மதுப் பழக்கத்தை தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் எவ்வித தகாத செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.