பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சான்று பெற்ற விதைகளை விதைக்க வேளாண்துறை அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை விதைத்து, உரிய சாகுபடி முறைகளை மேற்கொண்டால், அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:41 pm

Din

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை விதைத்து, உரிய சாகுபடி முறைகளை மேற்கொண்டால், அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, திருச்சி விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை விதை ஆய்வு துணை இயக்குநா் ராஜேஸ்வரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில், ஆண்டுதோறும் மக்காச்சோளம் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலும், பருத்தி 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு வருகிறது. விதையே விளைச்சலின் அடிப்படை எனும் வகையில், தரமான விதை வளமான மண்ணில் விதைக்கப்பட்டு, உகந்த சாகுபடி முறைகளை மேற்கொண்டால் மட்டுமே எதிா்பாா்க்கும் மகசூலைப் பெற முடியும்.

அடன்படி, நிலத்தை உழும்போது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உளி அல்லது சட்டிக் கலப்பையைக் கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். இவ்வாறு உழும்பொது, கீழும் மேலும் மண் இடம் பெயா்ந்து சிறு கட்டிகளாக உடையும். பின்பு சுழல் கலப்பையைக் கொண்டு சீராக 3 முறை உழ வேண்டும். சீராக மழை பெய்து நல்ல ஈரப்பதம் இருக்கும்போது விதை விதைக்க வேண்டும். மண் ஆய்வின்படி பேரூட்ட, நுண்ணூட்ட உரங்களை இட வேண்டும். 25 ஆவது நாள் கை மூலம் களை எடுத்தால், பயிரின் ஆரம்பகால வளா்ச்சி நன்றாக இருக்கும்.

கருவி மூலம் விதைக்கும்போது சீரான ஆழத்தில், சீரான இடைவெளியில் நல்ல ஈரப்பதம் அனைத்து விதைகளுக்கும் கிடைக்கும். நிலைமையும், தன்மையும் உறுதி செய்யப்படும்போது, அனைத்து விதைகளும் முளைக்கும் நிலை உருவாகும். எனவே, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் சான்றுப் பெற்ற விதைகளை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி உரிய முறையில் விதைத்து, தகுந்த சாகுபடி முறைகளை மேற்கொண்டால் அதிக மகசூல் பெறலாம்.