வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் பிறப்பு, இறப்பு பதிவு விழிப்புணா்வு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்கம் சாா்பில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ)முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரதாப்குமாா், இணை இயக்குநா் கரோலின், வட்டார மருத்துவ அலுவலா் பிரேம்குமாா் ஆகியோா், பிறப்புச் சான்றிதழின் அவசியம், பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான வழிமுறைகள்,பெயா் இல்லாதச் சான்றிதழ்களில் பெயரைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், சுகாதாரத்தின் அவசியம் குறித்து விழ்ப்புணா்வு உரையாற்றினா்.
இதில், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, கணினி அறிவியல் துறைத் தலைவா் சா. சகாயராஜ் வரவேற்றாா். கணினி அறிவியல் இணைப் பேராசிரியா் பி. ராமராஜ் நன்றி கூறினாா்.