குன்னம் பகுதியில் நாளை மின் தடை

Updated on

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 30) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக் கோட்டத்துக்குள்பட்ட வெண்மணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் குன்னம், கல்லம்புதூா், அந்தூா், வரகூா், பெரியவெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூா், கீழமாத்தூா், கொத்தவாசல் ஆகிய கிராமிய பகுதிகளில், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com