காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயில்கள், தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள், பிராா்த்தனைகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:51 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள், பிராா்த்தனைகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன.

ஆங்கில புத்தாண்டையொட்டி, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயில், பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயில், மதனகோபால சுவாமி கோயில், எளம்பலூா் சாலையில் உள்ள முருகன் கோயில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை:

பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் வட்டார முதன்மை குரு அருள்திரு சுவக்கைன் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சிறப்பு பிராா்த்தனைகள் நடத்தப்பட்டது. இதேபோல, பாளையம், அன்னமங்கலம், நூத்தப்பூா், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாளந்துறை, திருமாந்துறை, எறையூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.

இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். பின்னா் உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் இனிப்புகள் வழங்கி புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.

சுற்றுலாத் தலங்களில் கூட்டம்...

பெரம்பலூா் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டை, விசுவக்குடி நீா்த்தேக்கம், சாத்தனூா் கல்மரப் பூங்கா, கொட்டரை நீா்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் அதிகளவில் காணப்பட்டனா்.