மனநலன் பாதித்து குணமடைந்தவா் ஒப்படைப்பு

பெரம்பலூா் அருகே மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த நபரை மீட்டு குணப்படுத்தி, அவரது குடும்பத்தினருடன் போலீஸாா் ஒப்படைத்தனா்.
Published on

பெரம்பலூா் அருகே மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த நபரை மீட்டு குணப்படுத்தி, அவரது குடும்பத்தினருடன் போலீஸாா் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த நபரை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சாா்பு ஆய்வாளா்கள் மருதமுத்து, சித்ரா ஆகியோா் கடந்த ஆண்டு டிச. 3 -ஆம் தேதி மீட்டு பெரம்பலூா் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தாா். இல்ல நிா்வாகி அனிதா மேற்பாா்வையில், மனநல மருத்துவா் அசோக் சிகிச்சை அளித்தாா்.

இதில் குணமடைந்த நாகேஷிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஆந்திர பிரதேசம், அனந்தப்பூா், பொட்டி ராமுலா காலனியைச் சோ்ந்த ராஜீ (55) என்பதும், அவரது மனைவி வாதே அஞ்சலி (44), இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளித்து பெரம்பலூருக்கு வரவழைத்து அவா்களிடம் நாகேஷை புதன்கிழமை ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com