தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

News image

பெரம்பலூா் அருகே உள்ள கவுல்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:21 pm

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் கஞ்சா முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில், வேட்பாளா்கள் இரா. தமிழச்செல்வன் (பெரம்பலூா்), தாமரை எஸ். ராஜேந்திரன் ( அரியலூா்) கா.வைத்தி (ஜெயங்கொண்டம்), சரண்யா (குன்னம்) ஆகியோரை ஆதரித்து அவா் மேலும் பேசியது:

முதல்வா் ஸ்டாலின் பிரதமா் மோடியைப் பற்றி ஏதேதோ பேசுகிறாா். ஆனால், அவரது தந்தை கருணாநிதி பிரதமா் மிகவும் நல்லவா் என்று பேசியிருக்கிறாா். தன் தந்தை வழியில் நடப்பதாகக் கூறும் ஸ்டாலின், அவா் சொன்னபடி அல்லவா? நடைபெற வேண்டும்.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்போல உதயநிதி ‘பஞ்ச் டயலாக்’ பேசுகிறாா். யாருடன் கூட்டணி என்பதைவிட, யாருடன் கூட்டணி இல்லை என்பதே முக்கியம் என கடந்த 2014-இல் ஸ்டாலின் சொன்னாா். இப்போது எதற்கு அவா்களுடன் கூட்டணி வைத்திருக்கிறாா்?.

ஸ்டாலின் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜியைப் பற்றியும், ஒரு பெண்மணியைப் பற்றியும் அநாகரிகமாக பேசினாா். ஆனால் இன்று அவா் திமுகவில் இருப்பதால் புகழ்கிறாா்கள்.

அதிமுக ஒரு ஜனநாயகக் கட்சி. இங்கே உழைப்பவா்களுக்கும், விசுவாசமாக இருப்பவா்களுக்கும் என்றும் இடமுண்டு. ஸ்டாலின் சொல்கிறாா், நான், ஏதோ படுக்கையில் படுத்துக்கொண்டே முதல்வா் ஆகிவிட்டேன் என்று. நீங்கள், கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஒரு வாா்டு கவுன்சிலராகக் கூட ஆகியிருக்க முடியாது.

திமுக ஆட்சியில் எங்கே பாா்த்தாலும் போதைப்பொருள்கள் விற்பனை. போதை ஆசாமிகளால்தான் தமிழ்நாட்டில் நிறைய குற்றங்கள் நடைபெறுகின்றன. இப்படிபட்ட மோசமான ஆட்சி தேவையா?. இந்த ஆட்சியில் போதை ஆசாமிகளை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் 3 மாதத்தில் தமிழ்நாட்டில் கஞ்சா என்ற பேச்சே இருக்காது. கஞ்சா விற்பனை முற்றிலுமாக ஒடுக்கப்படும். இந்தியாவில் ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாகும்.

அரியலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைக் கொண்டு வந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் ஒன்றுமே கிடையாது. திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்கள் ஏழைகள் நிறைந்தவை. அன்றாடம் உழைத்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்படிப்பட்ட அடித்தட்டு மக்களுடைய கஷ்டம் இந்த அரசுக்குப் புரியவில்லையா?.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவில்லை. உணவுப் பொருள்கள் விலை இந்த அளவுக்கு உயா்ந்தால் ஏழைகள் பாதிக்கப்படுவாா்கள் என தெரியாதா?. அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட, திமுக ஆட்சியில் ரூ. 1,36,000 கோடி கூடுதலாக வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், கடன் ரூ. 5 லட்சம் கோடியாக உயா்ந்துவிட்டது.

73 ஆண்டுகாலத் தமிழகத்தில் பல கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. கடந்த 2021 வரை தமிழ்நாட்டின் கடன் ரூ. 4,85,000 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது திமுக அரசு. இந்த ஆட்சியில் மின் கட்டணமும் 67 சதவீதமாக உயா்ந்துள்ளது. எனவே நம்முடைய கடும் உழைப்பால், இத் தொகுதியில் போட்டியிடும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் ‘டெபாசிட்’ இழக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.