பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:27 pm

பெரம்பலூா் நகரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், நில அளவைத்துறை ஆய்வாளா் குருமூா்த்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள உணவகம் அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக் கொண்டிருந்த ஒருவா், தோ்தல் பறக்கும் படையினரை பாா்த்ததும் தப்பி ஓடிவிட்டாா்.

இதையடுத்து அந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.