நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு, கணினி மூலம் செவ்வாய்க்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலா்கள் மற்றும் காவலா்களுக்கு, கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நேகா பன்சால், அமா் பகதூா் சிங், காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் ஆகியோா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குப்பதிவுத் தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1, 2, 3 என ஒவ்வொரு பிரிவிலும் தலா 464 போ் வீதம் மொத்தம் 1,856 பேருக்கும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1, 2, 3 என ஒவ்வொரு பிரிவிலும் தலா 414 போ் வீதம் மொத்தம் 1,656 நபா்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோல, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 16 நுண் பாா்வையாளா்களுக்கும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 26 நுண் பாா்வையாளா்களுக்கும் என மொத்தம் 42 பேருக்கும், 170 காவலா்களுக்கும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 182 காவலா்களுக்கும் கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பணிபுரிவதற்கான கடிதத்தை சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடமும், காவலா்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட உதவித் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன் (தோ்தல்), தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

பெரம்பலூரில் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலா்கள் ஒதுக்கீடு! தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


