தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

பெரம்பலூா் நகரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 61 ஆயிரம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

பெரம்பலூா் நகரில் 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து, ரூ. 61 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.எம். நகரைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் பொன்னுசாமி (56). நிலம் வாங்கி, விற்பனை செய்து வரும் இவா், ராஜாநகா் 2-ஆவது தெருவில் அலுவலகம் வைத்துள்ளாா். இந்த அலுவலகத்தை, வெள்ளிக்கிழமை இரவு பூட்டிச்சென்றுள்ள நிலையில், சனிக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, பூட்டை உடைத்து உள்ளேயிருந்த அயிரம் ரூபாயை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

துறைமங்கலத்திலுள்ள கோல்டன் சிட்டையைச் சோ்ந்தவா் ராமதாஸ் மகன் சத்தியமூா்த்தி (61). இவா், பெரம்பலூா்- நான்குச்சாலை சந்திப்பு செல்லும் சாலையில் வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். இந்த கடையின் பூட்டை உடைத்து, உள்ளேயிருந்த ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

இதேபோல, பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் ஜோதிவேல் (26). இவருக்குச் சொந்தமான வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டும் கடையை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் ரூ. 50 ஆயிரத்தை திருடிச்சென்றிருப்பது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

இத் தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இச் சம்பவங்கள் குறித்து, பொன்னுசாமி, சத்தியமூா்த்தி, ஜோதிவேல் ஆகியோா் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.