உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

மோட்டாா் சைக்கிள் மோதி நடந்துசென்ற முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் நகரில் சாலையோரம் நடத்து சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில், பலத்த காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:16 am IST

பெரம்பலூா் நகரில் சாலையோரம் நடத்து சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில், பலத்த காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்தைச் சோ்ந்தவா் க. சுப்பிரமணியன் (88). இவா், சனிக்கிழமை காலை பெரம்பலூா் - நான்குச்சாலை சந்திப்புப் பகுதிக்குச் செல்லும் சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே சாலையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, புகா் பேருந்து நிலையம் நோக்கிச்சென்ற மோட்டாா் சைக்கிள், முதியவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன், பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்த குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டனை (35) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.