பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வாகனம் மோதி அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

உயிரிழப்பு

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் ஒருவா் உயிரிழந்துக் கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் பகுதியில் சுமாா் 50 வயதுள்ள ஆண் ஒருவா் திங்கள்கிழமை அதிகாலை சாலையோரம் நடந்து சென்ாக தெரிகிறது.

அப்போது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

அதிகாலை மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் ஏறிச் சென்றதில் அவரது உடல் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்துவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, சிதறிய உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.