தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 4 ஆம் நிலைக்கு இணையான ஊதியம் வழங்க கோரி, பணியைப் புறக்கணித்து வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்
கிராம உதவியாளா்களுக்கு 4-ஆம் தரநிலைக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை (பிப். 5) முதல் பணியைப் புறக்கணித்து காலவரையற்ற தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் கிராம உதவியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த போ் பணியைப் புறக்கணித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாலசந்திரன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் காந்தி, மாவட்ட பொருளாளா் தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் பிரேம்குமாா் கோரிக்கைகளை வலியுறத்தி பேசினாா். இந்த இப் போராட்டத்தில் 103 கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா். இதனால் வருவாய்த்துறை மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டன.
தொடர்புடையது

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

கிராம உதவியாளா்கள் வேலைநிறுத்த காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


