போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் அருகே 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 7-ஆவது நாளாக

News image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினா்.

Updated On :2 மார்ச் 2026, 9:54 pm

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் அருகே 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 7-ஆவது நாளாக திங்கள்கிழமை வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்

நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் அ.ரமேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் அ.ஏழுமலை, தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்க மாநில அமைப்புச் செயலா் பெருமாள், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ரகுபதி மற்றும் தோழமை சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பணிப் பாதுகாப்புச் சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், வருவாய்த்துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்தக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.