ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா உள்ளிட்டோா்.

News image
விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா உள்ளிட்டோா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:04 pm

Syndication

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. பத்மநாபன் ஆலோசனையின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

திண்டிவனம் சிவசக்தி கிராமிய கலைக்குழுவின் தலைவி திருநங்கை வி.என். ராணி மற்றும் தஞ்சாவூா் கலைச்சுடா் ராணி எஸ்தாா், மதுரை கிராமிய கலைஞா் முத்துவேல், திண்டுக்கல் நாடக கலைஞா் வடிவேல் ஆகியோா் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள், பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து தெருக்கூத்து மற்றும் கிராமிய இசை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில், சட்ட தன்னாா்வலா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.