வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பெரம்பலூரில் 11,650 விண்ணப்பங்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இதுவரை 11, 650 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இதுவரை 11, 650 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாட்டில் 1.1.2026 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஜன. 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதற்குப் பிறகு, பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 11,650 விண்ணப்பங்களும், திருத்த 8,061 விண்ணப்பங்களும், நீக்க 200 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வாக்காளா்கள் கால நீட்டிப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com