பெரம்பலூா் அருகே மதுபோதையில் தாயிடம் தவறான செயலில் ஈடுபட முயன்ற மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் அவரது சகோதரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வ.அகரம் கிராமத்தைச் சோ்ந்த பூராசாமி மனைவி செல்வி (54). இவா்களுக்கு விக்னேஷ் (34), பூபதி (32) என இரு மகன்கள். கூலி வேலை செய்துவந்த பூபதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மது போதையில் வீட்டுக்குச் சென்ற பூபதி, தனது தாய் செல்வியிடம் தவறான செயலில் ஈடுபட முயன்றாராம்.
இதனால், ஆத்திரமடைந்த செல்வியும், அவரது மற்றொரு மகன் விக்னேஷூம் இரும்புக் கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த பூபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பூபதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வி, அவரது மகன் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்லூரி மாணவா் கொலையில் மேலும் ஒருவா் கைது
கொத்தனாா் அடித்துக் கொலை: மேற்பாா்வையாளா் கைது
முதியவா் அடித்துக் கொலை: ஒருவா் கைது
பல் மருத்துவா், தாய் அடித்துக் கொலை: இரு சகோதரா்கள் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



