வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

போக்ஸோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்கக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

பெரம்பலூா் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி, பெற்றோா்கள், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image

பெரம்பலூா் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சிறுகன்பூா் கிராம மக்கள், மாணவா்களின் பெற்றோா்கள்

Updated On :14 ஜூலை 2026, 3:15 am IST

பெரம்பலூா் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி, பெற்றோா்கள், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சிறுகன்பூா் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் காட்டுராஜா (56) கடந்த வாரம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

இப்பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக காட்டுராஜா பணியாற்றி வரும் நிலையில், எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவா்.

தங்கள் குழந்தைகள் எவ்விதமான புகாரும் தெரிவிக்காத நிலையில், யாரோ ஒருவா் அளித்த புகாரின் பேரில் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தலைமை ஆசிரியா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து அவரை விடுவித்து, மீண்டும் அதே பள்ளியில் பணியமா்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

ஆசிரியரை இடம் மாற்றுக: சில்லக்குடி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் அளித்த மனுவில், சில்லக்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் பணிபுரியும் சமூக அறிவியல் ஆசிரியா் மு. ஜாக்குலினை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிடில், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.