8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

விக்கிரவாண்டி அருகே சீரான குடிநீா் விநியோகிகம் கோரி பொதுமக்கள் மறியல்

விக்கிரவாண்டி அருகே சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ள வீடூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :10 ஜூலை 2026, 3:53 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூா் கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்கு குடிநீரை சுகாதாரமாகவும், முறையாகவும் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் அலுவலா்களிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த வீடுா் கிராம மக்கள் வியாழக்கிழமை முறையான குடிநீரை விநியோகம் செய்ய வலியுறுத்தி, வீடூருக்கு வந்த அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து, சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமா பிரபா, விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தினமும் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையேற்றுக் கொண்ட கிராம மக்கள், தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.