உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஆமந்தக்கடவு, கள்ளபாளையம், ரங்கம்மாபாளையம், அப்பிலியம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை என புகாா்கள் எழந்தன.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக் குடங்களுடன் உடுமலை-திருப்பூா் பிரதான சாலையில் மறியல் போராடத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தால், அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் செல்ல முடியாமல் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த உடுமலை கோட்டாட்சியா் குமாா் மற்றும் காவல் துறையினா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அப்போது, முறையாக குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உயா் அதிகாரிகளிடம் இது குறித்துப் பேசி உடனடியாகப் பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனா். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் அருகே குடிநீா் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



