மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:28 am IST

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இ- மெயில் மூலமாக வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றங்களில் இருந்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினா்.

பின்னா், பெரம்பலூா் போலீஸாா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் மோப்பநாயுடன் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடிகுண்டுகளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, நீதிபதிகள் உள்ளிட்டோா் தங்களது பணிகளை தொடா்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.