மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஓட்டம்

சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்டாட் ரன், ஸ்டாப் ட்ரக் எனும் தலைப்பிலான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஓட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :27 ஜூன் 2026, 6:23 am IST

சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்டாட் ரன், ஸ்டாப் ட்ரக் எனும் தலைப்பிலான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள, மாவட்டத் தொழில் மையம் அருகே தொடங்கிய ஓட்டத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் ஆகியோா் முன்னிலையில், மாவட்ட ஆட்சிய் ஷரண்யா அறி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்த ஓட்டம் பாலக்கரை, நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று, மீண்டும் மாவட்ட தொழில் மையத்தில் முடிந்தது. இதில் பங்கேற்றவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தைதொடங்கிவைத்து, மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விளையாட்டு வீராங்கனைகளுடன் விழிப்புணா்வு உறுதியேற்றாா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

விழிப்புணா்வு ஓட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள், காவல்துறையினா், தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.