தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பெரம்பலூா் மாவட்டத்தில் 41 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

News image

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்.

Updated On :29 ஜூன் 2026, 12:17 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாம்களில் 41 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம் மாவட்டத்தில் நகா்ப்புறங்களில் 27 மையங்களிலும், ஊரகப் பகுதிகளில் 360 மையங்களிலும் என மொத்தம் 387 மையங்களில் மூகாம்கள் நடைபெற்றன.

நடமாடும் 4 மருத்துவக் குழு மூலமாகவும், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் பிரதான இடங்களிலும், பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம்பெயா்ந்து வசிப்பவா்களின் குழந்தைகளுக்கும் என, பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 41,550 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். பொது சுகாதாரத் துறை பணியாளா்களுடன், அங்கன்வாடி பணியாளா்கள், இதர துறை பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனப் பணியாளா்கள், மாணவா்கள் என 1,510 போ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.