தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:18 am IST

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம்- கீழப்புலியூா் சாலை அருகே கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் ர. பிரியங்கா தலைமையிலான பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியேச் சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், குன்னம் வட்டம், பெருமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் மருதமுத்து (50) என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ. 99,500 வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் ஒப்படைத்தனா்.