விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

News image
Updated On :3 மே 2026, 5:47 am IST

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலா்கள் மற்றும் சட்டம்- ஒழுங்கு காவலா்களுக்கான கவாத்துப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தலைமைவகித்தாா். பின்னா், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் காவலா்கள் மேற்கொள்ளும் பணிகள், ஒவ்வொரு காவலரும் பொறுப்புணா்வோடு பணியாற்றுவதோடு, உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறித்தினாா். மேலும், காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

இப் பயிற்சியில், காவலா்களுக்கான உடற்பயிற்சி, கவாத்துப் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) உள்பட, ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.