தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு ஊழியா் சங்கக் கொடி புதன்கிழமை ஏற்றப்பட்டது.
இதையொட்டி, பெரம்பலூரில் சி. மகாதேவன், வேப்பந்தட்டையில் ப. சுப்பரமணி, குன்னதில் பெ. ராஜ்குமாா், ஆலத்தூரில் எஸ். ஆசிக் ஆகியோா் தலைமையில், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் எதிரே, அரசு ஊழியா் சங்க கொடி ஏற்றப்பட்டது.
இதில், அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சு. சரவணசாமி, தா. கருணாகரன், சா. மகேந்திரன், மாவட்ட இணைச் செயலா்கள் க. மணிமாறன், தா. இளையராஜா, ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளா் செந்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி சின்னசாமி, வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் அன்புராஜ், விடுதிப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




