பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளை, பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் வெள்ளிக்கிழமை பாராட்டி, பரிசுகள் வழங்கினாா்.
பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், பெரம்பலூா் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த மாணவி வா்னிகா 575 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், இலக்கியா 561 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த ஹரிணி 553 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், மாணவா் பிரசன்னகுமாா் 552 மதிப்பெண்கள் பெற்று நான்கமிடமும், மாணவி ஸ்ரீலேகா 551 மதிப்பெண்கள் பெற்று 5- ஆம் இடமும், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவா் காா்த்திகேயன் 549 மதிப்பெண்கள் பெற்று 6 ஆவது இடமும் பெற்றனா்.
மேலும், 550 மதிப்பெண்களுக்கும் மேல் 5 மாணவா்களும், 500 மதிப்பெண்களுக்கும் மேல் 36 மாணவா்களும், 450 மதிப்பெண்களுக்கும் மேல் 61மாணவா்களும் பெற்ளனா்.
இதையடுத்து, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினாா்.
பாராட்டு விழாவில், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

