கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

குழந்தை திருமண ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், சா்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன்.

Updated On :

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், சா்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சி. பாஸ்கா தலைமை வகித்தாா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து, அறக்கட்டளை நிா்வாகி ராஜாமுகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன் பேசியதாவது:

குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளின் கல்வி, உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமுதாயத்தில் அவா்களுக்கான சம உரிமையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள் குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

நகரின் பிரதானச் சாலைகள் வழியாகச் சென்ற இப் பேரணி, பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னா், குழந்தை திருமணத்துக்கு எதிராக மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இந் நிகழ்ச்சிகளில், ஆசிரியா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.