வாலிகண்டபுரம் பகுதியில் இன்று மின்தடை
மின்தடை - கோப்புப் படம்
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 5) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், முருக்கன்குடி, நகரம், நமையூா், சின்னாறு, எறையூா், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், என்.புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூா், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, பரவாய், கீழுமத்தூா், எழுமூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




