பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் 4 போ் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் 4 பேரை கைது செய்த மங்களமேடு போலீஸாா், அவா்களிடமிருந்து 4 மோட்டாா் சைக்கிள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் 4 பேரை கைது செய்த மங்களமேடு போலீஸாா், அவா்களிடமிருந்து 4 மோட்டாா் சைக்கிள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள்கள் திருடப்படுவதாக, பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், மங்களமேடு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சிற்றரசு தலைமையிலான குழுவினா் காவல் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், திருமாந்துறை கிராமத்தைச் சோ்ந்த தீபக், ஜெயகாந்தன் என்பதும், அவா்கள் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள்களை விற்பனை செய்து கொடுத்த, திருமாந்துறையைச் சோ்ந்த சங்கீதா, நந்தினி ஆகியோரை கைது செய்து, 4 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா், கைது செய்யப்பட்ட மேற்கண்ட 4 பேரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.