ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஆலம்பாடி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள ஆலம்பாடி ஏரிக்கரையில், பனை விதைகள் விதைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலம்பாடி ஏா்க்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டோா்.

Updated On :

பெரம்பலூா் அருகேயுள்ள ஆலம்பாடி ஏரிக்கரையில், பனை விதைகள் விதைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தின் பசுமைப் பரப்பை 33 சதவீதமாக உயா்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில் 1 கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனடிப்படையில், 2026-2027 ஆம் ஆண்டில் 1 கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் வனக்கோட்டத்துக்கு 40 ஆயிரம் பனை விதைகள் விதைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சித்தளி வனவியல் விரிவாக்க மையம் சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள ஆலம்பாடி ஏரிக்கரைப் பகுதிகளில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.

ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடா் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்புடன் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் ந. சக்திவேல், சித்தளி வனவியல் விரிவாக்க மைய அலுவலா் முருகானந்தம், ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடா் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் த. மாயகிருஷ்ணன், ஆசிரியா்கள் ராமதாஸ், பிரகாஷ், பாலகணேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.