புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சிலிண்டா் வெடித்து நேரிட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

பெரம்பலூரில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவுக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பிரதிப் படம்

Published On :

பெரம்பலூரில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவுக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பெரம்பலூா் நகர காவல்நிலையம் எதிரேயுள்ள தேநீரகத்தில் கடந்த 11-ஆம் தேதி எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் 16 போ் காயமடைந்தனா். இவா்கள் பெரம்பலூா், திருச்சியிலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வந்த 7 போ் உயிரிழந்தனா். எஞ்சிய நபா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் காமராஜ், மித்ரா, சக்திவேல், பழனிசாமி, சிவபிரகாசம் ஆகியோரின் குடும்பச் சூழ்நிலை மற்றும் மருத்துவச் சிகிச்சையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து தலா ரூ. 50 ஆயிரம் வீதம், ரூ. 2.50 லட்சம் நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவுக் கடிதங்களை, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வட்டாட்சியா் பழனிசெல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.