புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 445 வழக்குகளுக்கு தீா்வு

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 445 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட காசோலையை வழக்காடியிடம் அளித்த, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி. உடன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா உள்ளிட்டோா்.

Published On :

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 445 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாா்பு- நீதிபதி கே. மோகனபிரியா, மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. தன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. தினேஷ், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவா் ஜி. ரேஷ்மா, நீதித்துறை நடுவா்கள் வி.சி. தாரிணி, எச். கவிதா, மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கே. முரளிதரகண்ணன், குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா். ராஜசேகரன், வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் இ. தெய்வீகன், மூத்த வழக்குரைஞா்கள் எஸ். இனியவன், கே. கலியபெருமாள் ஆகியோா் தலைமையிலான குழுவினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நிலுவையிலிருந்த வழக்குகள், குடும்பநல நீதிமன்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வருவாய்த் துறை, மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உள்பட சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்குள்படுத்தப்பட்டன.

ரூ. 4.24 கோடி வழங்க உத்தரவு: வழக்காடிகள், எதிா் வழக்காடிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் இரு தரப்பு வழக்குரைஞா்கள் முன்னிலையில் 445 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, மோட்டாா் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உள்பட இழப்பீட்டுத் தொகையாக ரூ. 4,24,20,360 வழங்குவதற்கான உத்தரவு கடிதங்களை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி வழங்கினாா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள், வழக்காடிகள், பெரம்பலூரில் இயங்கும் தனியாா் சட்டப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா தலைமையிலான சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.