அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க கிராம ஊராட்சிகள் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்றார் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன்.
புதுக்கோட்டையில் வனத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற வனத் துறை மூலம் ஏலம் விடப்பட்ட சமூகக் காடுகள் மூலம் கிடைத்த வருவாயில் 75 சதப் பங்குத்தொகை ரூ. 38.44 லட்சத்தை 52 ஊராட்சிகளுக்கு வழங்கும் விழாவில் அவர் பேசியது:
தமிழகத்தில் 1960 முதல் கிராமக் கண்மாய்களிலும், ஒதுக்குக் காடுகளுக்கு வெளியில் உள்ள தரிசு நிலங்களில் பண்ணைக் காடுகள் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதையடுத்து 1981 -ல் சுவீடன் உதவியுடன் (சிடா) 1981 முதல் 1986 வரை 5 ஆண்டுகளுக்கு முதல்கட்டமாக சமூகக் காடுகள் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழகத்தில் 1.40 லட்சம் எக்டேரில் காடுகள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து 2-ம் கட்டமாக 1988 முதல் 1994 வரை செயல்படுத்தப்பட்டது. அதில் வனத்துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் பங்கேற்றன. இதன் மூலம் இடைபடு காடுகள் திட்டம் உருவாகி, அதுவே தற்போது வனக்கூட்டு மேலாண்மைத்திட்டத்துக்கு முன்னோடியாக திகழ்கிறது.
சமூக வனத்தோட்டங்களை ஏலம் விடப்பட்டதன் மூலம் 75 சத பங்குத் தொகையாக 2009-10 -ல் ரூ.22 லட்சத்து 86 ஆயிரத்து 374-ம், 2010-11 -ம் ஆண்டில் ரூ. 15 லட்சத்து 58 ஆயிரத்து 30 ஆக மொத்தம் ரூ.38 லட்சத்து 44 ஆயிரத்து 404 மதிப்பில் பங்குத்தொகை வருவாய் கிடைத்துள்ளது.
இதனை 52 ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக வங்கி வரைவோலைகளாக தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதை கிராம ஊராட்சித் தலைவர்கள் கிராமங்களின் அடிப்படை வசதிக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் திட்டங்களைச் செயல்படுத்தி நல்ல பெயரை எடுக்க ஊராட்சித் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும். பசுமை வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான புகார்கள்தான் அதிகமான எங்களிடம் வருகின்றன. எனவே அதில் தவறுகள் நடப்பதற்கு நீங்கள் காரணமாகிவிட வேண்டாம் என்றார்.
இதில் எம்எல்ஏ வி.ஆர். கார்த்திக்தொண்டைமான், வருவாய் அலுவலர் க. நாகராசன், ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, வருவாய்க் கோட்டாட்சியர் சி. முத்துமாரி, நகர்மன்றத் தலைவர் (பொ)எஸ். அப்துல்ரகுமான், ஒன்றியக் குழுத் தலைவர்கள் உமாதேவி கருப்பையா, (புதுக்கோட்டை), சுப்பையா (விராலிமலை), கெங்கையம்மாள் சொக்கலிங்கம் (கறம்பக்குடி), ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஜெயலெட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.வி. துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மு.க. ஸ்டாலின் - விஜய் சந்திப்பு!

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

பெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோ

சான்றிதழ் கொண்டு வந்து எம்எல்ஏவாக பதவியேற்றார் அமைச்சர் கீர்த்தனா!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
