ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

863 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் 863 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாநில அமைச்சர் ந.சுப்பிரமணியன் வழங்கினார்

Updated On :13 மே 2013, 1:23 am IST

அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் 863 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாநில அமைச்சர் ந.சுப்பிரமணியன் வழங்கினார்

மாவட்ட மகளீர் திட்டம் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் செ.மனோகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் விராலிமலை சி.விஜயபாஸ்கர், அறந்தாங்கி மு.ராஜநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்த முகாமில்  400 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 பெறுவதற்கான உத்தரவு மற்றும் 414 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் நல திட்ட உதவிகள் பெற உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட கடிதம் மற்றும் 463 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கி தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன் பேசுகையில்

தமிழகத்திலேயே முதல்வர் அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் முகாம்களை புதுக்கோட்டை மாவட்டநிர்வாகம் அதிக அளவில் சிறப்பாக நடத்திவருகிறது மாவட்டத்தின் 10-வது முகாமாக நடக்கும் இங்கு  மாதம் ரூ.ஆயிரம் வீதம் 400 பேருக்கு ஓரே நாளில் வழங்கப்பட்டுள்ளது. உடன் பிறந்தவர்களே வெறுத்து ஒதுக்கிய மாற்றுத்திறனாளிகளை அவர்களே பராமரிக்க மாதம் தோறும் வழங்கும் நிவாரண தொகை பயன்படும் என முதல்வர் மனதில் உதித்தது தான் இந்த மருத்துவமுகாம்கள் என்றார் இவர்களை மற்றவர்கள் மனித நேயத்துடன் நடத்த வேண்டும் என்றுதான் முதல்வர் இத்தகைய முகாம்கள் மூலம் அவர்களுக்கு உதவி செய்வதாக கூறினார்.

முகாமில் நகர வங்கி தலைவர் க.சிவசண்முகம், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பி.எம்.பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் க.துரை, வட்டாட்சியர் கோ.தவச்செல்வன், நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார், ஒன்றிய ஆணையர் சு.தனபாலன், உள்ளிட்ட அலுவலர்கள் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக மகளீர் திóட்ட அலுவலர் திருவரங்கம் வரவேற்றார், நிறைவில் உற்பத்தி குழு தலைவர் சத்திய சீலன் நன்றி கூறினார்.

பட விளக்கம்ஹற்வ்12ம்ண்ய் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிக்கு உத்தரவு நகல் வழங்குகிறார் அமைச்சர் ந.சுப்பிரமணியன் உடன் மாவட்ட ஆட்சியர் செ.மனோகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.விஜயபாஸ்கர், மு.ராஜநாயகம் உள்ளிட்டோர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.