அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

கொதித்த பால் கொட்டியதில் காயமடைந்த சிறுமி சாவு

டீக்கடையில் கொதிக்க வைத்திருந்த பால் பாத்திரம் தடுமாறி கொட்டியதில், பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Published On :

டீக்கடையில் கொதிக்க வைத்திருந்த பால் பாத்திரம் தடுமாறி கொட்டியதில், பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆர். புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் செந்தில்குமாரின் மகள் சீதாலெட்சுமி(11). அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த இவர், சனிக்கிழமை டீ வாங்குவதற்காக அந்த ஊரில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, டீக் கடையில் உள்ள அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலுடன் இருந்த பாத்திரம் எதிர்பாராத விதமாக அருகே நின்றிருந்த சிறுமி சீதாலெட்சுமி மீது கொட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.