திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மவுன்ட் சீயோன் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் மத்தியக் கல்வி பாடத் திட்டப் பள்ளியில் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :

புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் மத்தியக் கல்வி பாடத் திட்டப் பள்ளியில் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுதில்லி ஸ்கோலஸ்டிக்ஸ் புத்தக நிலையத்தின் மதுரைக் கிளை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தகத் திருவிழா கண்காட்சியை பள்ளி நிர்வாகி ஜே. ஜோனத்தன் தொடக்கி வைத்தார்.

இதில், அறிவுசார்ந்த புத்தகங்கள், விளையாட்டு, ஓவியம், ஆங்கில அகராதி, இலக்கியம், கதைகள், கணினி, அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்பட சுமார் 1500 தலைப்புகளில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

செப். 11, 13 மற்றும் 14 ஆகிய 3 நாள்கள் நடைபெற்ற விற்பனைக் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர் என சுமார் 1000 பேர் பங்கேற்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

ஏற்பாடுகளை, பள்ளியின் இணை இயக்குநர் ஜே. ஏஞ்சலின், முதல்வர் ஜலசாகுமாரி, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.