குறைந்த செலவில் சுற்றுலா: இந்தியாவுக்கு 6ஆம் இடம்
உலகில் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாமிடத்தில் உள்ளது என்றார் கைக்குறிச்சி பாரதி மகளிர் கல்லூரி முதல்வர் ஜானகிசுவாமிநாதன்.
உலகில் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாமிடத்தில் உள்ளது என்றார் கைக்குறிச்சி பாரதி மகளிர் கல்லூரி முதல்வர் ஜானகிசுவாமிநாதன்.
இக்கல்லூரியில் உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு செஞ்சிலுவை சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பேசியது:
சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த உலக நாடுகள் ஐக்கிய நாடு சபையில் 1979ஆம் ஆண்டு ஒன்று கூடி ஒவ்வொரு ஆண்டும் செப். 27ஆம் நாள் உலக சுற்றுலா நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றி அன்று முதல் கொண்டாடி வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு கருப்பொருள் உண்டு. நடப்பாண்டில் 100 கோடி சுற்றுலா பயணிகளும் 100 கோடி வாய்ப்புகளும் என்ற கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. நம்முன்னோர்கள் சுற்றுலாவை பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல் வணிகம் செய்து பொருளீட்டுவதற்காகவும் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் முதல் நவீன கால கட்டடங்கள் வரை நமக்கு பெரும் சான்றாக விளங்குகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இங்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகம், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பும் அதிகம். முக்கியமாக சுற்றுலா செல்வதற்கான செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இதன்காரணமாகவே அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்புகின்றனர். இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை மற்ற நாடுகள் மகிழ்வுடன் வரவேற்கின்றன. குறிப்பாக தென்ஆப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து ஜெர்மனியிலிருந்து வருபவர்களைக் காட்டிலும் இந்தியாவிலிருந்து செல்பவர்கள்தான் அதிகம் என்பதால் அந்நாடு இந்தியச் சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்புக்களுடன் இணைந்து நாடு முழுவதும் 15 நகரங்களில் சிறப்பு முகாமை நடத்தியது. அதில் கடந்த 2013}லிருந்து இதுவரை தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 1.27லட்சம் என்பது தெரியவந்துள்ளது என்றார்.
கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர்கள் கே.ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் மா. குமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

