இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த ஆறு நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுமென அறிவித்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் ஆர். சரண்யா வெளியிட்ட தகவல்:
கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற ஆண்கள், பெண்களுக்கு இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் சேர விரும்பும் 18 முதல் 40 வயது வரையுள்ள 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற இளைஞர்கள் 3 புகைப்படங்கள், மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் செல்லிடப்பேசி எண் ஆகியவைகளைக் குறிப்பிட்டு நவ. 22-ம் தேதிக்குள், நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 15062, மேல நான்காம் வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை. 622001 என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு. 04322-225 339, 70109-57772.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


