ஆலவயல் ஊராட்சியில் காங்கிரஸ் ஆண்டு விழா
பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியின் 133-வது ஆண்டுத் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.


பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியின் 133-வது ஆண்டுத் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டாரத் தலைவர் கே. செல்வராஜன் தலைமை வகித்தார்.
கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முயற்சியில் காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படவும், மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையவும் உறுதிமொழியேற்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் எஸ்பி. மணி, சரவணபவன்மணி, தேனூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் கிரிதரன் நிர்வாகிகள் சுப்பையா, மலையாண்டி, செல்வராஜ், சித. சுப்பையா, திருவாசகம், பாலமுருகன், சின்னகருப்பு, மலையாண்டி, ராமசாமி, மாணிக்கம் மற்றும் மகளிர் அணி நிர்வாகி லெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...