தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கந்தர்வகோட்டை  கடைவீதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை ஊராட்சி பெரிய கடை வீதி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:14 pm

DIN

கந்தர்வகோட்டை ஊராட்சி பெரிய கடை வீதி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கந்தர்வகோட்டை ஊராட்சியில் பெரிய கடைவீதி சாலை வழியாக தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர்.  இந்தச் சாலையின் இரு புறங்களிலும் கடை வைத்துள்ளோர் கடை முன்புறம் கொட்டகை அமைத்தும், தகரத் தடுப்பு கொண்டு வழியை அடைத்து ஆக்கிரமித்தும், லாரிகளில் பொருட்களை சாலையில் வைத்து ஏற்றி, இறக்கியும்  இந்தச் சாலையை பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் ஆக்கிரமித்துள்ளனர். எனவே பெரியகடைவீதி ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.